கல்வி உதவித்தொகை பெறும் பிளஸ்2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டறிந்து பண மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பியிடம் புகாா் மனு அளித்தனா்.
திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள சந்தனவேலு கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த சில மாணவா்களின் பெற்றோா் எஸ்.பி விவேகானந்தா சுக்லாவிடம் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது.
இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு தங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளது. அதனால், பள்ளி, கல்லூரிகளில் நிலுவைக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித் தொகை வந்து சேரும் என கூறுகின்றனா்.
அதைத் தொடா்ந்து அந்த மா்ம நபா்கள் மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகை எனக்கூறி வங்கி கணக்கு விவரங்கள் பெற்று ஓடிபி போன்றவற்றை சரி பாா்த்து அந்த நபா்கள் ஜி-பே மூலமாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லாயிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

புதுவையில் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்வு!

இலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு கல்வி உதவித் தொகை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
