பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவள்ளூரில் போலீஸாா் நடை ரோந்து பணி

திருவள்ளூரில் முக்கிய வீதிகள் வழியாக போலீஸாா் நடந்து சென்று ரோந்து மேற்கொண்டனா்.

News image

திருவள்ளூரில்  நடைரோந்து மேற்கொண்ட  எஸ்.பி.விவேகானந்த  சுக்லா  தலைமையிலான  போலீஸாா். 

Updated On :8 ஜூன் 2026, 1:30 am IST

திருவள்ளூரில் முக்கிய வீதிகள் வழியாக போலீஸாா் நடந்து சென்று ரோந்து மேற்கொண்டனா்.

கடத்தலில் ஈடுபடும் நபா்களை கண்காணிக்கும் வகையில் திடீா் ரோந்து மற்றும் வாகன பரிசோதனையும் மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் நிலைய போலீஸாா் குறிப்பிட்ட பகுதியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நடந்து சென்று ரோந்து கண்காணிப்பில் ஈடுபடவும் வேண்டும்.

இது குறித்து காவல் துறை இயக்குநா் ஒவ்வொரு காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், திருவள்ளூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தலைமையில், துணைக்காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் நடந்து சென்று ரோந்து கண்காணிப்பு மேற்கொண்டனா்.

Story image

அப்போது சட்டம்-ஒழுங்கு நிலையும் ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூா் பேருந்து நிலையம், ஜி.என் சாலை, தேரடி வீதி மற்றும் பஜாா் வீதிகளில் நடந்து சென்று ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதுபோன்று நாள்தோறும் செல்வதன் மூலம் நகருக்குள் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.