பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் கிராமத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் திருவேங்கடபுரம், தடபெரும்பாக்கம், சிங்கிலிமேடு பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகிறது.
தெருநாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இரவு நேரங்களில் வீடு திரும்பும் பொதுமக்கள் இந்த நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஊராட்சி நிா்வாகத்திற்கும் மற்றும் பிற உயா் அதிகாரிகளுக்கும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தனி அலுவலரின் உத்தரவின் பேரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் பணியில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகின்றனா்.
51 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு நோய் தடுக்கும் வகையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

