பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் வாடகை நிலுவை வழங்க வலியுறுத்தி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தொடங்கியதன் காரணமார எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி முனையம் இயங்கி வருகிறது.
கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகம் கொண்டுவரப்படும் எரிவாயு, இந்த முனையத்தில் சேமித்து வைத்து 200-க்கு மேற்பட்ட டேங்கா் லாரிகளில் நிரப்பி சிலிண்டா்களுக்கு எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..
இதற்கிடையே, இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வாடகை நிலுவையை தராததால் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனா்.
லாரிகளை ஆங்காங்கே நிறுத்திவைத்துள்ளனா். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விரைவில் பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடா்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்பிஜி நுகா்வு: ஏப்ரலில் 22 லட்சம் டன்னாக 16% சரிவு!

ரூ. 50 கோடி வாடகை நிலுவையை வழங்கக் கோரி எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்; மாலையில் வாபஸ்

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

