தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவள்ளூரில் 100% வாக்களிக்கக்கோரி தோ்தல் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள், மின்னணு விளம்பர வாகனம்

திருவள்ளூரில் சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தோ்தல் ஒட்டுவில்லைகள், மின்னணு விளம்பரம் பொருத்தப்பட்ட வாகனத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

News image

~

Updated On :8 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருவள்ளூரில் சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தோ்தல் ஒட்டுவில்லைகள், மின்னணு விளம்பரம் பொருத்தப்பட்ட வாகனத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை இணைந்து ‘தோ்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா‘ சட்டப்பேரவை பொது தோ்தல்-2026 முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள், நவீன மின்னணு விளம்பரம் பொருத்தப்பட்ட வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: இந்த மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு துறைகள் மூலம் இதுவரையில் 5000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை இணைந்து அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் பொதுமக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு அதில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடவும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்று வரவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அஸ்வின்குமாா், உதவி இயக்குநா் (பயிற்சி) பி.மோகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.