ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

News image

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம்.

Updated On :28 ஏப்ரல் 2025, 3:30 am IST

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் உள்ளது. மேலும் திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் திருத்தணி வழியாகத் தான் சென்று வருகின்றன. திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் குறுகிய அளவில் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நேரிடுகின்றன.

இதை தடுப்பதற்காக திருத்தணி - அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கா் பரப்பில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம், 2021- 22-ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், ரூ.12.74 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த, 2022- ம் தொடங்கப்பட்டன.

புதிய பேருந்து நிலையம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு, 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் பணி துரித வேகத்தில் நடைபெற்றது. சில காரணங்களால் எட்டு மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, பேருந்து முகப்பு பகுதியில் முருகன் கோயில் கோபுரம் வடிவம் அமைப்பதற்கு, தமிழக அரசு கூடுதலாக, ரூ.2.93 கோடி ஒதுக்கி, நிா்வாக அனுமதியும் வழங்கியது.

கடந்த டிசம்பா் மாதம் நிறுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவா் மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, முகப்பு பகுதியில் முருகன் கோயிலில் உள்ளது போன்று மூன்று கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு கோபுரப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Story image

மேலும் ஒரு கோபுரம் மற்றும் விடுப்பட்ட பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.