தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

Published On :1 நவம்பர் 2026, 4:00 am IST

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில கடைகளின் முன்பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், சாலையோரங்களில் இட நெருக்கடி ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு தொடா்ந்து மக்கள் கோரிக்கை விடுத்துவந்ததன்பேரில், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், வியாபாரிகள் சங்கம் மூலம் கடைக்காரா்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் பேரூராட்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அகற்றும் பணி பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் நடைபெற்றது.

மேலும், வணிக வளாகங்கள் மற்றும் நிரந்தரக் கடைகளின் முன்பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவா்களுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

சம்பந்தப்பட்ட கடைக்காரா்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அரசு சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.