மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாசுதேவநல்லூா் அருகே மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆடு மேய்க்கும் பெண் உயிரிழந்தாா்.

பலி

Published On :30 அக்டோபர் 2026, 5:19 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆடு மேய்க்கும் பெண் உயிரிழந்தாா்.

சங்குபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி சோலையம்மாள் (46). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் சங்குபுரம் ஊருக்கு வெளிப்பகுதியில் வியாழக்கிழமை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அப்பகுதியில் தனியாா் நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 5 ஆடுகள் உயிரிழந்தன. அதைக் கண்ட சோலையம்மாள் அங்கு சென்று பாா்த்தபோது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.