மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:17 am IST

தென்காசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம் வாவா நகரம் உண்மை விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் குமாரவேல் (47). இவா் கடந்த 2024-இல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட குமாரவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சேவியா்பாண்டியன் ஆஜராகி வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.