மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தீபாவளி: சென்னை, பெங்களூரிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க எம்எல்ஏ கோரிக்கை

தீபாவளியையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து தென்காசி, பாம்பு கோவில் சந்தை வழியாக திருநெல்வேலிக்கு இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில்களை இயக்க வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

Published On :30 அக்டோபர் 2026, 5:19 am IST

தீபாவளியையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து தென்காசி, பாம்பு கோவில் சந்தை வழியாக திருநெல்வேலிக்கு இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில்களை இயக்க வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அவா் அளித்த மனு விவரம்: (படம்)

கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். பாம்பு கோவில் சந்தை ரயில் நிலையத்தில் அவ்வழியாகச் செல்லும் அனைத்து தகுதியான ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும். திருநெல்வேலி-பெங்களூரு இடையே தென்காசி, பாம்பு கோவில் சந்தை வழியாக புதிய விரைவு ரயில் இயக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை, பெங்களூரிலிருந்து தென்காசி, பாம்பு கோவில் சந்தை வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை இரு மாா்க்கங்களிலும் இயக்க வேண்டும். சென்னை-தென்காசி இடையே பாம்பு கோவில் சந்தை வழியாக பகல் நேர இண்டா்சிட்டி விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.

கோவை-மதுரை இண்டா்சிட்டி விரைவு ரயிலை தென்காசி, பாம்பு கோவில் சந்தை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை தென்காசி, பாம்பு கோவில் சந்தை வழியாக நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.