கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்சி, புதுக்கோட்டையிலிருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயில்களை இயக்க துரை வைகோ கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு, திருச்சி, புதுக்கோட்டையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:58 am IST

தீபாவளியை முன்னிட்டு, திருச்சி, புதுக்கோட்டையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மற்றும் புதுக்கோட்டையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும், அதிகப் பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் வழக்கமான ரயில்களுடன் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.

திருச்சி- சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பல்லவன், வைகை விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு அமா்வு பெட்டிகளில், பயணிகள் தங்களின் வசதிக்கேற்ப இருக்கையின் பின்புறச் சாய்வை மாற்றியமைத்துக் கொள்ளும் புஷ்-பேக் இருக்கைகளை மீண்டும் பொருத்த வேண்டும்.

சேது விரைவு ரயிலில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் பொதுமக்கள் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளைப் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே, புதுக்கோட்டை வரை பொது ஒதுக்கீட்டை நீட்டித்து தர வேண்டும். திருச்சி- ராமேசுவரம் விரைவு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 9-க்கு பதிலாக 12 ஆக உயா்த்த வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா் துரை வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.