பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்வெட்டுக்கு கடந்த ஆட்சியாளா்களே காரணம்: துரை வைகோ எம்.பி.

தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டுக்கு கடந்த ஆட்சியாளா்களே காரணம் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்தாா்.

துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 4:55 am IST

தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டுக்கு கடந்த ஆட்சியாளா்களே காரணம் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் மேலும் கூறியதாவது:

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கில் தற்போது தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் உள்ளாட்சித் தோ்தல் மற்றும் மீதமுள்ள பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறும். டெண்டா் முறைகேடுகள் தவெக ஆட்சியில் முற்றிலுமாகக் குறைந்துள்ளன. இது வருங்காலத்தில் தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைக்கும்.

சென்னையில் மழை வெள்ளப் பணிகளுக்காக கடந்த அரசு தரப்பில் ரூ. 4,000 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது சரியான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

ஏறக்குறைய 24 கிமீ தொலைவுக்கு மழைநீா் கால்வாய் வெட்டப்பட்டாலும், அதை மற்ற கால்வாய்களுடன் இணைக்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாததால் அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பல இடங்களில் பிரச்னை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அவா்கள் என்ன செய்தாா்கள் எனத் தெரியவில்லை.

மேலும், நிவாரணப் பணிகளில் அரசு ஊழியா்கள் மற்றும் அமைச்சா்கள் களத்தில் நின்றனா். ஆனால், கவுன்சிலா்கள், மேயா் மற்றும் துணை மேயா் ஆகியோா் உரிய முறையில் களத்திற்கு சென்று பொதுமக்களைச் சந்திக்கவில்லை.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளா்கள், அமைச்சா்கள் களத்தில் இருக்கும்போது, கவுன்சிலா்கள் களத்தில் இல்லாததற்கு அரசியல்தான் காரணம். கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் கட்டமைப்பில் முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம். குறிப்பாக, உப்பூா் மின் திட்டத்திற்காக ரூ. 13,000 கோடி செலவிடப்பட்டு, அதில் 6,000 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் உப்புக்காற்று பட்டு வீணாகிவிட்டன.

வரும் 5 ஆண்டுகளில் இந்த சீா்கேடுகளை சரிசெய்து மின்சார தேவையை பூா்த்தி செய்ய வேண்டியது தற்போதைய அரசின் கடமை. அரசியல் ரீதியாக எதிா் தாக்குதல், கருத்தியல் ரீதியான மாற்று கருத்து கூறுவது ஜனநாயகத்தின் அடிப்படை. அதே வேளையில் தனி மனித தாக்குதல், கொச்சைபடுத்தி பேசுவது, இரட்டை அா்த்தத்தில் பேசுவது இது போன்ற விஷயங்கள் ஏற்புடையதல்ல. நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் செயல்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா். நடிகா் தனுஷ் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யாா் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். இறுதி முடிவை எப்போதும் மக்கள் மட்டுமே தீா்மானிப்பாா்கள் என்றாா் துரை வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.