மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல்: ஆலங்குளம் மனமகிழ் மன்றம் மூடல்

கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:53 am IST

டாஸ்மாக் ஊழியா்களின் கடையடைப்பு போராட்டத்தால், ஆலங்குளத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மது வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகளவில் கூட்டம் கூடியதால் போலீஸாா் கடையை மூட உத்தரவிட்டனா்.

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஸ்கேனிங் நடைமுறை உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் வழக்கமாக மது வாங்குபவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இதையடுத்து, ஆலங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றத்தை நோக்கி பலரும் சென்றனா். மாலையில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால், மது வாங்குவதற்காக ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊழியா்கள் பத்து பத்து பேராக உள்ளே அனுமதித்து மது விற்பனை செய்தனா்.

மனமகிழ் மன்றத்தில் குவிந்த கூட்டத்தால் ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்யும் பொருட்டு, இரவு 7 மணிக்கு மன மகிழ்மன்ற கடையை அடைக்க போலீஸாா் உத்தரவிட்டனா். இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.