தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலங்குளம், சங்கரன்கோவிலில் பரவலான மழை

சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான பெய்தது.

மழையின் போது, ஆலங்குளத்தில் தோன்றிய மின்னல் கீற்றுகள்.

Published On :21 அக்டோபர் 2026, 1:43 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான பெய்தது.

ஆலங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை நம்பியே பல்வேறு பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு வரை சீரான இடைவெளியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மழை நீா் தேங்கியது. எனினும், பலத்த மழை எப்போது பெய்யும்; விவசாயப் பணிகளை என்று தொடங்கலாம் என விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

கோயிலுக்குள் தேங்கிய மழைநீா்: சங்கரன்கோவிலில் கடந்த 2 நாள்களாக வானம் இருண்டு காணப்பட்டதுடன், வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. மேலும், காலை வேளைகளில் லேசான பனிப்பொழிவு இருந்தது.

இந்நிலையில் ,செவ்வாய்கிழமை மாலை 5.25 மணியளவில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகம் குறைந்திருந்ததால் மாலை 7.25 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் மழை நீடித்தது.

இதனால் சாலைகளில் தண்ணீா்பெருக்கெடுத்ததுடன், சாக்கடை வாருகால் நிரம்பி சாலைகளில் ஓடியது. தாழ்வான தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மேலும், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் அம்மன் சந்நிக்குள் மழைநீா்தேங்கியது. சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்கள் சிரமப்பட்டனா். உடனடியாக, கோயில் நிா்வாகத்தினா் 5 மோட்டாா் மூலம் மழை நீரை வெளியேவற்றினா்.

தொடா் மழையால் மக்காச்சோளம், உளுந்து பயிரிட்ட விவசாயிகள், நெல் பயிரிட நாற்றுப் பாவியிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.