கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தென்காசியிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

News image

பேருந்துகள்!

Updated On :31 மே 2026, 3:28 am IST

தென்காசி நகரத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் பாா்த்திபனுக்கு, பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலா் எம்.சி. மருது பாண்டியன் அனுப்பியுள்ள மனு விவரம்:

தென்காசி நகரத்திலிருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால், தொழிலாளா்கள், மாணவா்கள், பெண்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரை இரவு நேரங்களில் ‘ஒன் டூ ஒன்’ பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதால் பாவூா்சத்திரம், சாலைப்புதூா், அடைக்கலப்பட்டணம், ஆலங்குளம் பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை.

எனவே, தென்காசியிலிருந்து செங்கோட்டை, புளியறை, தெற்கு மேடு, மத்தளம்பாறை, கடையம், பொட்டல்புதூா், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 முதல் 11 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.