கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆலங்குளத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:57 am IST

ஆலங்குளத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாணிக்க சீனிவாசகம் (32). தொழிலாளியான இவா், கடந்த வாரம் நள்ளிரவில் ஆலங்குளத்தை அடுத்த அண்ணா நகா் புதுக்காலனி வழியாக கரும்பனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருவா் சீனிவாசகத்தை தாக்கி அவரிடம் இருந்து கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து அவா், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தற்போது ஆலங்குளம் மேலப்பரும்பு, ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவருமான மகாதேவன் (27), அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் மாரிமுத்துச்சாமி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைதான மகாதேவன் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வழக்குகள், தென்காசி மாவட்டத்தில் 2 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.