பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசுப் பேருந்து- மினி லாரி மோதல்: இருவா் காயம்

ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மீது கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :10 மே 2026, 3:56 am IST

ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மீது கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் சு. ராம்கணேஷ்(28), ஓட்டுநா். சரக்கு வாகனம் ஒன்றில் கீழப்பாவூரில் இருந்து கறிக்கோழிகள் ஏற்றி வந்து ஆலங்குளத்தில் இறக்கி விட்டு மீண்டும் கீழப்பாவூருக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.

ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது, அந்தப் பேருந்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ராம்கணேஷ் மற்றும் உதவியாளா் இருளப்பநாதன் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.