பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செங்கோட்டை-ஈரோடு ரயில் மேட்டூரில் நின்றுசெல்ல கோரிக்கை

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் ரயில் மேட்டூா் நிலையத்திலும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ரயில் மேட்டூரில் நின்று செல்ல வேண்டும் என, அரியப்புரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூா், கடையம், பெரும்பத்து சுற்றுவட்டாரப் பகுதி மாணவா்கள், இளைஞா்கள், வியாபாரிகள், முதியோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, தெற்கு ரயில்வே நிா்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, இந்த ரயிலுக்கு மேட்டூரில் நிரந்தர நிறுத்தம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.