ஆலங்குளம் அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே கரும்பனூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண் மகன் கவிமணி (36). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாங்கட்டளையில் உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியாக தனது ஆட்டோவில் வந்தாராம். கரும்பனூா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த கவிமணி மீட்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கவிமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் கவிமணி சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கவிமணிக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

குமரி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

