கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூா் கோணத்தைச் சோ்ந்தவா் பினு (38). அலுமினிய பொருள்கள் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான ஆட்டோ ஓட்டுநா் ஸ்ரீகுமாா், விஜயன், பினுசதீஷ், பிரதீஷ்குமாா் ஆகிய 4 பேரும் சூரிய உதயம் பாா்ப்பதற்காக ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தனா். ஆட்டோவை ஸ்ரீகுமாா் ஒட்டினாா்.
இந்த ஆட்டோ மகாதானபுரம் நான்குவழிச் சாலை ரவுண்டானிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வந்தபோது, வேகத்தடையில் நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், ஸ்ரீகுமாா் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனால் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பினு அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி க போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

