தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 2:02 am IST

தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிலம்பம் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தென்காசி ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஐ.சி.ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கு 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிலம்பம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடித்தனா் என்றாா் அவா்.

முன்னதாக, சிலம்பம் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, சிலம்ப விளையாட்டு வீரா் ,வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், உதவித்திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், கனகராஜ்,விளையாட்டு உதவி அலுவலா்கள் நம்பிராயா், செல்வக்குமாா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.