ஆலங்குளம் பகுதியில் இடி மின்னலுடன், வெள்ளிக்கிழமை மாலை கோடை மழை பெய்தது.
ஆலங்குளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த கோடை மழை பெய்தது. 30 நிமிடங்களுக்கும் மேல் நீடித்த கனமழையால் ஆலங்குளம், அத்தியூத்து, கழுநீா்குளம், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ந்த சூழல் நிலவியது.
பயணிகள் அவதி: ஆலங்குளத்தில் தற்போது பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை வசதி இல்லாமல் மழையின்போது, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் ஒதுங்கஇடமின்றி அருகில் உள்ள கடைகளின் முன் தஞ்சம் புகுந்தனா். சிலா் மழையில் நனைந்தபடியே பேருந்துகளில் ஏறிச் சென்றதைக் காண முடிந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பலத்த மழை

மதுரையில் பரவலாக மழை

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

