தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்! முதல்வர் விஜய் திறந்துவைத்தார்!

மதுரையில் ரூ. 10 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தது பற்றி...

Chief Minister Vijay inaugurates Renovated Gandhi Museum in madurai

னரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தார். - DIPR

Published On :28 செப்டம்பர் 2026, 1:31 pm IST

மதுரையில் ரூ. 10 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் இன்று (செப். 28) திறந்துவைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடக்கிவைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து காந்தி அருங்காட்சியகத்துக்கு சாலை வலம் மேற்கொண்டார். செல்லும் வழியில் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர், காந்தி அருங்காட்சியகம் வந்த அவர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Story image

இதையடுத்து ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார்.

சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தமிழகப் பயணம் உள்ளிட்ட தகவல்கள், நவீன டிஜிட்டல் மற்றும் தொடுதிரை தொழில்நுட்பங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய காட்சியமைப்புகளை முதல்வர் விஜய் பார்வையிட்டார். பின்னர் காந்தி குறித்த காணொலியை பார்வையிட்டார்.

காந்தி அருங்காட்சியகத்தில் வெளியில் காத்திருந்தவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

சுமார் இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Vijay inaugurates Renovated Gandhi Museum in madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.