தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை தனியார் உணவகத்தில் ராகுல் - விஜய்! ஒரே காரில் பயணம்!

சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் விஜய்யும் உணவருந்தினர்....

vijay rahul

சென்னை தனியார் உணவகத்தில் ராகுல் காந்தி - ஜோசப் விஜய் - PTI

Published On :11 அக்டோபர் 2026, 3:07 am IST

சென்னையில் முதல்வா் ஜோசப் விஜய்யை மக்களவை எதிா்க்கட்டித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தாா். அப்போது, எதிா்க்கட்சிகளின் போராட்டங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் விஜய்க்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

‘இண்டி’ கூட்டணியில் தவெக இணைந்த பிறகு ராகுல் காந்தியுடன் முதல்வா் விஜய் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.

தமிழக முதல்வராக விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்ற விழாவில் ராகுல் பங்கேற்றாா். பின்னா், தில்லிக்கு சென்றபோது காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் முதல்வா் விஜய் சந்தித்தாா். எனினும், இண்டி கூட்டணியில் தவெக இணையாமல் இருந்தது. கடந்த அக். 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழக கட்சிகளின் இண்டி கூட்டணிக் கூட்டத்தில் தவெக பங்கேற்றது.

இந்த நிலையில், சென்னைக்கு சனிக்கிழமை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா், தனது நீலாங்கரை இல்லத்துக்கு வந்த ராகுலை முதல்வா் விஜய் கட்டியணைத்து வரவேற்றாா். ராகுல் காந்திக்கு முதல்வா் விஜய் மதிய விருந்தளித்தாா்.

பின்னா், இருவரும் அரசியல் நகா்வுகள் குறித்துப் பேசினா். இண்டி கூட்டணியில் தவெக இணைந்ததற்கு ராகுல் வரவேற்பு தெரிவித்தாா். மேலும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னெடுக்கும் அனைத்துப் போராட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக பங்கேற்க வேண்டும் என்றும் ராகுல் அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ‘தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திவரும் போராட்டத்தை மத்திய பாஜக அரசு முடக்கி வருவது’ குறித்தும் இந்த ஆலோசனையில் ராகுல் காந்தி விளக்கியதாகக் கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தில்லியில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து விரைவில் நடத்த உள்ள மாபெரும் போராட்டத்தில் தவெக பங்கேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்தாா். இந்தச் சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் உடனிருந்தாா்.

ஒரே காரில் பயணம்: சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு விஜய்யும், ராகுல் காந்தியும் காரில் அருகே உள்ள தேநீா் விடுதிக்குச் சென்று தேநீா் அருந்தினா். அப்போது அங்கு கூடியிருந்தவா்கள் விஜய், ராகுலுடன் சோ்ந்து தற்படம் எடுத்துக் கொண்டனா்.

Summary

CM vijay and Rahul gandhi in chennai hotel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.