மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு! மின் உற்பத்தி பாதிப்பு!

கொதிகலன் குழாய் வெடிப்பால் 210 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம்...

 Mettur

கோப்புப் படம்

Published On :25 செப்டம்பர் 2026, 1:32 pm IST

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் தினசரி 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 840 மெகா வாட் அனல் மின் நிலையத்தில் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாய்லர் டியூப் பகுதியில் ஏற்பட்டுள்ள பழுதை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.

இன்று மாலை பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 5 நாள்களுக்கு முன்பு 2-வது அலகில் பாய்லர் டியூப் பழுது ஏற்பட்டுச் சரி செய்த நிலையில் இன்று மீண்டும் 1-வது அலகில் பழுது ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் மின் உற்பத்தி அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.