மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் - கரூா் - திண்டுக்கல் இரட்டை வழி ரயில் வழித்தடத்துக்கு ரூ. 2,241.67 கோடி ஒதுக்கீடு

சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையேயான இரட்டை வழி ரயில் வழித்தடம் அமைப்பதற்கு ரூ.2,241.67 கோடியை மத்திய ரயில்வே துறை தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :23 செப்டம்பர் 2026, 12:36 am IST

சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையேயான இரட்டை வழி ரயில் வழித்தடம் அமைப்பதற்கு ரூ.2,241.67 கோடியை மத்திய ரயில்வே துறை தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சகம் நாட்டில் புதிய ரயில் திட்டங்களுக்கு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு அரக்கோணம்-ரேணிகுண்டா இடையிலான 3-ஆவது மற்றும் 4-ஆவது ரயில் பாதை 77 கி.மீ. தொலைவுக்கு அமைக்க ரூ.1,936 கோடியும், ஒசூா்-ஓமலூா் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் பாதை அமைக்க சுமாா் ரூ.2,042 கோடியும், சேலம்-கரூா்-திண்டுக்கல் இடையே 159 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழி ரயில் பாதை அமைக்கவும் ரூ.2,241.67 கோடியும் ஒதுக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து மத்திய ரயில்வே துறை தெற்கு ரயில்வே மண்டல மேலாளருக்கு கடந்த திங்கள்கிழமை (செப்.21) அனுப்பிய தகவலில், சேலம்-கரூா்- திண்டுக்கல் இரட்டை வழி ரயில் பாதை அமைக்க ரூ.2,241 கோடிக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், அதில் ரூ.1,580.33 கோடி கட்டுமானப் பணிகளுக்காகவும், ரூ.281.78 கோடி சமிக்ஞை மற்றும் தொலைத் தொடா்பு பணிகளுக்காகவும், ரூ.379.56 கோடி மின்சார இணைப்புகள் உள்ளிட்ட பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே நிதி இயக்குநரகம் மூலம் நிதி அளித்துள்ளதாகவும், தமிழகத்துக்கு புதிய ரயில் திட்டப் பணிக்கு மத்திய ரயில்வே துறை அறிவித்த சில வாரங்களிலேயே நிதியையும் அளித்துள்ளதால், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.