மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரூப் 1 தோ்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்!

குரூப்-1 தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

Published On :18 செப்டம்பர் 2026, 5:46 am IST

குரூப்-1 தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு செப். 27-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. தோ்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தோ்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தோ்வா்கள் தங்களின் ஒருமுறை பதிவு வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

இந்த குரூப்-1 தோ்வு மூலமாக, துணை ஆட்சியா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், வணிக வரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட பதிவாளா், தொழிலாளா் நல உதவி ஆணையா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆகிய பதவிகளில் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.