பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலூரில் சிறைத்துறை உணவகம், பெட்ரோல் நிலையம் திடீர் மூடல்!

வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் நிலையம், உணவகம், கோழி இறைச்சி கடைகள் மூடப்பட்டிருப்பது பற்றி....

Vellore Prison Department Restaurant and Petrol Bunk Suddenly Closed!

வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் நிலையம், கோழி இறைச்சி கடை.

Published On :31 அக்டோபர் 2026, 6:46 pm IST

வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் நிலையம், உணவகம், கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறையில் சுமார் 900 க்கும் மேற்பட்ட சிறை வாசிகள் உள்ளனர். சுமார் 30 ஆண் நன்நடத்தை சிறைவாசிகளைக் கொண்டு வேலூர் மத்திய சிறை துறை சார்பில் பெட்ரோல் நிலையம், கோழி இறைச்சி கடை, பட்டாசு கடை மற்றும் உணவகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் பணியாற்றும் நன்னடத்தைகளுக்கு மாதம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் பாதுகாப்பு நடவடிக்காக வேலூர் மத்திய சிறை துறை சார்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் நிலையம், உணவகம் மற்றும் கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் நன்னடத்தை சிறைவாசிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதாக வேலூர் மத்திய சிறைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் சேலம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செயல்பட்டு வந்த பெட்ரோல் நிலையமும் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய ஆயுள் தண்டனை கைதிகள் சிறைக்குள் மீண்டும் அடைக்கப்பட்டதால் பெட்ரோல் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். அதேசமயம் சிறை நிர்வாகம் நடத்தும் சிக்கன் கடையில் பணியாற்றி வந்த தண்டனை கைதிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய சிறைச்சாலையை சுற்றிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறைத்துறை வளாகத்தில் தண்டனை கைதிகள் வேலை பார்த்து ஊதியம் ஈட்டி வந்த நிலையில் தற்போது அதுவும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Petrol Bunk and Eatery Run by Vellore Central Jail Temporarily Closed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.