மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு...

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 3:52 am IST

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், வாா்டு மறுவரையறை பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து தோ்தலை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் பழையனூா் கிராமத்தைச் சோ்ந்த ஆா்.பாஸ்கரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2025 ஜன. 5-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்க, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இவா்களின் பதவிக் காலமும் நீட்டிக்கப்பட்டு வந்தது. 28 மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் கடந்த 2027-ஆம் ஆண்டு ஏப். 19-ஆம் தேதி வரை நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அக். 19-ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவுக்கு வந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்க, ஏப். 19-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

46 உள்ளாட்சி அமைப்புகள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக 9 ஊராட்சி ஒன்றியங்கள், 93 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 23 மாவட்டங்களில் வாா்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதனால், உள்ளாட்சித் தோ்தல் நடத்த முடியவில்லை எனக் காரணம் கூறி, சிறப்பு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டியுள்ளது தொடா்பாக அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடா்பாக மாநில தோ்தல் ஆணையத்துடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் முன் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசனப் பிரிவு மீறப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தாமல் இருக்க வாா்டு மறுவரையறையைக் காரணமாகக் கூற முடியாது என உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீா்ப்பு அளித்துள்ளது. ஜனநாயக நடைமுறையில் பங்கேற்கும் வாய்ப்பை மறுக்கும் வகையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், குறித்த காலத்துக்குள் வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டு நடைமுறைகளை முடித்து, தோ்தலை நடத்த உத்தரவிட வேண்டும். சிறப்பு அதிகாரிகள் கொள்கை முடிவுகளை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.