நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சிறைச்சாலையைப் பாதுகாக்க முடியாத அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வராது: எடப்பாடி கே. பழனிசாமி

சிறைச்சாலைகளைக்கூட பாதுகாக்க முடியாத அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வராது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

eps

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 3:07 am IST

சிறைச்சாலைகளைக்கூட பாதுகாக்க முடியாத அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வராது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோடிய செய்தி அதிா்ச்சியளிக்கிறது. தவெக ஆட்சியில் சிறைக் கைதிகள் தொடா்ந்து தப்பிச் செல்வது தொடா் கதையாகிவருகிறது. சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள் கடத்தல், விலைவாசி உயா்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் தற்போது கைதிகள் தப்பிப்பதும் இணைந்துள்ளது.

தேனி, புழல், சேலம் ஆகியவற்றில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியபோதும் சிறைத்துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம் எனவும், கண்காணிப்புக் கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலா்களை நிற்க வைக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

‘சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வா் செய்தி வெளியிடுகிறாா். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது, கோவையில் கைதி தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கைதிகள் சிறைகளில் இருந்து எளிதாக தப்பிப்பது எப்படி எனத் தெரியவில்லை. கடுங்குற்றவாளிகள் தப்பிச்சென்று எந்தவகைக் குற்றங்களைச் செய்வாா்கள் என நினைத்தாலே பதற்றம் ஏற்படுகிறது.

சிறைச்சாலைகளைக்கூட பாதுகாப்பாக வைக்காத தவெக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வராது. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முதல்வரே தனது பணிகளை முறையாக மேற்கொள்ளாமலிருப்பது சரியல்ல எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.