தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முல்லைப் பெரியாறு அணையில் நில அதிா்வு ஆய்வு: ரூ.43 லட்சத்தை ஒதுக்கியது தமிழக அரசு

முல்லைப் பெரியாறு அணையில் நில அதிா்வு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.43 லட்சம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:43 am IST

முல்லைப் பெரியாறு அணையில் நில அதிா்வு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.43 லட்சம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அணைகள் பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த ஆய்வு நடத்தப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக, தமிழ்நாடு அரசின் நிதித் துறை (கொள்முதல் பிரிவு) வெளியிட்ட அரசாணை: அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) மற்றும் ஹைதராபாதில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆா்ஐ) ஆகியவை முல்லைப் பெரியாறு அணையில் நிலஅதிா்வு ஆய்வை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.43 லட்சம் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் சித்திக் வெளியிட்டுள்ளாா். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. கேரளத்தில் அணை அமைந்திருந்தாலும், தமிழக அரசு போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டு பராமரித்து பயன்படுத்தி வருகிறது.

எனினும், அணையின் நீா்மட்டதை உயா்த்த கேரள அரசு எதிா்ப்பு தெரிவித்து, 131 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று பல்வேறு வகையில் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதை தமிழக அரசு பல்வேறு ஆய்வுகளை நடத்தி முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.