தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவர் திருமகனாரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம்! - அன்புமணி ராமதாஸ்

தேவர் திருமகனார் மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம் என அன்புமணி கூறியிருப்பது குறித்து...

PMK President Dr. Anbumani Ramadoss Urges

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் - எக்ஸ்

Published On :30 அக்டோபர் 2026, 11:42 am IST

விடுதலைப் போராட்ட வீரரும், சமூக விடுதலைப் போராளியுமான தேவர் திருமகனாரின் குருபூசை நாளில் அவரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேவர் திருமகனாரின் தியாகத்தையும், பெருமையையும் நினைவு கூர்வோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஏராளமான பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டவரும், தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று அறிவித்து அதன்படி வாழ்ந்தவருமான விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவரின் 119-ஆம் பிறந்தநாளும், 64-ஆம் குருபூசை நாளும் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தமிழ்நாட்டு அரசியலையும் தேவர் திருமகனாரை தவிர்த்து விட்டு எழுத முடியாது. காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்த தேவர் பெருமகனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களையே தம்மை வழிநடத்திச் செல்லும் தளபதியாக கருதினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேதாஜியை வீழ்த்த காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் முயன்ற போது, தென்னிந்தியா முழுவதும் ஆதரவைத் திரட்டி நேதாஜியை வெற்றி பெறச் செய்த பெருமை தேவர் பெருமகனாருக்கு உண்டு.

இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

உள்ளூர் மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் பட்டியலிட முடியாதவை. சென்னை மாகாணத்தில் ஒரு சமூகத்தையே பிறப்பின் அடிப்படையில் குற்றவாளிகளாக்கும் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம்.

தமிழ்நாட்டில் அனைத்து தேசியக் கட்சிகளாலும், அனைத்து மாநிலக் கட்சிகளாலும் போற்றப்படும் பெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான். அதற்கு காரணம் நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் தான். அததகைய மகத்தான வரலாறு கொண்ட அவரது தியாகத்தையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறையினருக்காக நினைவு கூர்ந்து போற்றுவோம்! என கூறியுள்ளார்.

Let us commemorate the sacrifice and greatness of Thevar Thirumaganar! - Anbumani Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.