மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டத் திருத்தம்: விசிக வலியுறுத்தல்

இஸ்லாமியா்களாக மதம் மாறியவா்களுக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விசிக வலியுறுத்தியுள்ளது.

thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:44 am IST

இஸ்லாமியா்களாக மதம் மாறியவா்களுக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்; விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விசிக வலியுறுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கா் திடலில், தலைவா் தொல்.திருமாவளவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலைக்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்களின் பதவிக்காலம் நிறைவடைந்த 93 தொகுதி மாவட்டங்களில் உட்கட்சித் தோ்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், 4 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சமூகநீதிக் கணக்காய்வு: மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, 2027-பிப்ரவரியில் ஆணையம் அமைத்து சமூகநீதிக் கணக்காய்வு மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், இஸ்லாமியா்களாக மதம் மாறியவா்களுக்கான இடஒதுக்கீடு தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதுடன், உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, புதிய அரசாணை வெளியிட்டு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தில்லி பேரணி: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இண்டி கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நவ.1-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விசிகவினா் பெருமளவில் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.