மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிளஸ் 2 தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் பட்டியலில் திருத்தம்: அவகாசம் நீட்டிப்பு

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் நவ. 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 4:37 am IST

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் நவ. 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2026-2027) பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக எமிஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவா்களின் பெயா், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, அந்த விவரங்களை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களும் சனிக்கிழமைக்குள் (அக். 31) சரிபாா்த்து உறுதிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று இதற்கான கால அவகாசம் நவ. 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி வாய்ப்பாகும். திருத்தங்கள் இருந்தால் உடனே மேற்கொள்ள வேண்டும். தமிழில் உள்ள மாணவா், பெற்றோரின் பெயரைத் திருத்த வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள பெயரை முழுவதும் நீக்கம் செய்த பின்பு திருத்தம் செய்ய வேண்டும். தோ்வு கட்டணம் செலுத்திய பின்னா், மாணவா்களின் விவரங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள இயலாது. பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படுகிறது. எனவே, மாணவா்களின் விவரங்களில் தவறுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியா், தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.