பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்!

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றப்பட்டது பற்றி...

sandeep rathore

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர். - கோப்புப்படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:56 pm IST

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர், மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிஐடியின் அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருந்த கே. சங்கரை சிறைத்துறை டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைச்சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு 17 கைதிகள், சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 36 மணிநேரத்தில் 17 பேரும் மீண்டும் பிடிபட்டனர்.

இந்த விவகாரத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக தேனி மாவட்ட சிறைச்சாலையைச் சேர்ந்த 9 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், சிறைச்சாலையில் சூழலுக்கேற்ப காவல்துறையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவும் சந்தீப் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

முன்னதாக, கடந்த வாரம் புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோடிய நிலையில், மீண்டும் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோரை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் காலகட்டத்தில் மாநிலத்தின் காவல்துறை தலைவராக சந்தீப் ரத்தோர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Tamil Nadu Prisons Department DGP Sandeep Rathore transferred!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.