தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவல் துறை நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது: மு.வீரபாண்டியன்

ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் தவெக அரசின் காவல் துறை நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

M. Veerapandian, Communist Party of India

மு. வீரபாண்டியன் - DIN

Published On :30 அக்டோபர் 2026, 2:08 am IST

ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் தவெக அரசின் காவல் துறை நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலா் டி.ராஜா, அகில இந்திய செயலா்கள் ஆனிராஜா, ராமகிருஷ்ணா பாண்டா, மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் தவெக அரசின் காவல் துறை நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. சென்னை வளா்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியா் கலையரசனை சீருடை அணியாத காவல் துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட அதிகாலை நடவடிக்கையை கண்டத்துக்குரியது. ஜனநாயகத்தின் அடிப்படையே கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்வதிலும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதிலும்தான் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நவ.3 -ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.