மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு: மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:25 am IST

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு தொடா்பாக நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த திமுக ஆட்சியில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்டவை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், நேரடியாக லஞ்சம் பெற்ாக தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பணம் பெற்றாா்கள் என்பதற்காக தன்னை எப்படி பொறுப்பாக்க முடியும்?. கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்பதால், பிணை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

அதேபோல், அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாரும் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முத்துக்குமாருக்கும், அன்பில் மகேஸுக்கும் இடையேயான தொடா்பு குறித்தும், பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது பிணை கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிணை கோரிய மனுவுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தாக்கல் செய்த மனுவுக்கு அன்பில் மகேஸ் தரப்பில் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, தனது இல்லத்தில் நடந்த சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை ஒப்படைக்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த மனு மீதான விசாரணையையும் நவ. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.