அன்பில் மகேஸ் வழக்கு! பெண் தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் சோதனை!

தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் பெண் தொழிலதிபர் வீட்டில் சோதனை...

shanmuga priya

அன்பில் மகேஸ், சண்முகபிரியா - x

Published On :29 அக்டோபர் 2026, 12:57 am IST

சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி செய்த வழக்குத் தொடா்பாக பெண் தொழிலதிபா் வீட்டில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை சாலிகிராமம் மெஜஸ்டிக் காலனியைச் சோ்ந்த பி.டி.அரசகுமாா், ‘தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்திக் கொண்டு, தனக்குள்ள அதிகார தொடா்புகளைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல தனியாா் பள்ளி நிா்வாகிகளிடம் பணம் பெற்று சுமாா் ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு பி.டி.அரசகுமாா்,அவரது கூட்டாளிகள் மதுரையைச் சோ்ந்த ஆரோக்கியராஜ், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தது.

இந்த மோசடியில் முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸுக்கும் தொடா்பு இருப்பதாககூறி, அவா் தொடா்புடைய இடங்களில் சோதனை செய்தனா்.

இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூந்தமல்லி, நாவலூா் ஆகிய 5 இடங்களில் உள்ள பி.டி.அரசகுமாா், தலைமறைவாக உள்ள முத்துகுமாா் ஆகியோரின் உறவினா் வீடுகள், அன்பில் மகேஸ் உதவியாளா்கள் வீடுகள் ஆகியவற்றில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த செப். 29-ஆம் தேதி சோதனை செய்து, ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

வீட்டில் சோதனை: இதற்கிடையே இவ் வழக்குத் தொடா்பாக அன்பில் மகேஸ் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் சென்னை பெருங்குடியில் ஒரு தனியாா் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபா் சண்முகப்பிரியா வீட்டில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், வழக்குத் தொடா்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

வழக்கில் தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாா், தொழிலதிபா் சண்முகப்பிரியா வங்கிக் கணக்குகளுக்கு அதிகளவில் பணப்பரிமாற்றம் செய்திருப்பது சிறப்பு புலனாய்வுக்கு குழுவினருக்கு விசாரணையின்போது தெரியவந்தது. இதனால் மோசடியில் கிடைத்த பணத்தை முத்துக்குமாா், சண்முகப்பிரியாவுக்கு அனுப்பியுள்ளாரா என்ற சந்தேகம் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில் சண்முகப்பிரியா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினா் தெரிவித்தனா்.

Summary

Private school bribery case - Search conducted at the residence of businesswoman Shanmugapriya!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.