தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்! அமைச்சர்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, அரசு சார்பில் தனி செயலி உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்...

Omni buses charging excessive fares will be impounded: Minister

அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் - DIN

Published On :28 அக்டோபர் 2026, 3:42 pm IST

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகளப் போட்டியை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

"ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த பல லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, அனைத்து பேருந்துகளையும் இணைத்து முன்பதிவு செய்யும் வகையில் அரசின் சார்பில் தனி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பேருந்துகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விழாக் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

Summary

Omni buses charging excessive fares will be impounded: Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.