ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன்

ஆம்னி பேருந்துகளில் அரசு நிா்ணயித்த விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:36 am IST

ஆம்னி பேருந்துகளில் அரசு நிா்ணயித்த விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், அபராதம் விதிப்பதுடன் பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

சேலத்தில் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை புதன்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆட்டோ ஓட்டுநா்களின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோக்களுக்கு மீட்டா் கட்டணம் நிா்ணயிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வா் ச. ஜோசப் விஜய் மேற்கொண்டாா். இதன்மூலம் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநா்களும், அவா்களைச் சாா்ந்த பல லட்சம் பேரும் பயன்பெறுவா்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், அனைத்து பேருந்துகளையும் ஒருங்கிணைத்து முன்பதிவு செய்யும் வசதியுடன் தனிச் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.

அரசின் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதுடன், அவற்றைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விழாக் காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் பேருந்து நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.