மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாம்கோ சிறப்பு செயல்பாட்டுக்கு முதல் பரிசு: அமைச்சா் பாராட்டு

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம், தென் மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து சிறப்பு சான்றிதழ் மற்றும் முதல் பரிசு பெற்றது.

அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:11 am IST

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம், தென் மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து சிறப்பு சான்றிதழ் மற்றும் முதல் பரிசு பெற்றது. இதற்கு சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தவா், பாா்சி மற்றும் ஜெயின் ஆகியோா் பயன் பெறும் வகையில், சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது. தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதி கழகத்தின் முகவா்களாக செயல்பட்டு வரும் தென் மண்டல மாநிலங்களுக்கான மண்டல ஆய்வு கூட்டம் அண்மையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் மாநில முகமையாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழக தென்மண்டல அளவில் கடந்த 2025 -26 ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு, தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் தலைவா் (ம) மேலாண்மை இயக்குநரால் வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துக்கு, சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.