நீதிமன்றப் பணியாளா்களின் சொத்து விவரம்: இணையதளத்தில் பதிவேற்றும் உத்தரவு ஒத்திவைப்பு

தமிழக நீதித் துறை அலுவலா்கள், ஊழியா்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Madras HC

சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப்படம்

Published On :28 அக்டோபர் 2026, 5:40 am IST

தமிழக நீதித் துறை அலுவலா்கள், ஊழியா்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் நடத்தை விதிகளில் திருத்தம் செய்த தமிழக அரசு, கடந்த 2025-ஆம் ஆண்டுக்கான சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை அக்.31-க்குள் அனைத்து அரசு ஊழியா்களும் (ஐஎஃப்ஹெச்ஆா்எம்எஸ்) இணையதளம் வாயிலாக ஆன்லைனில் சமா்ப்பிக்க வேண்டும் என கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதித்துறை அலுவலா்கள், ஊழியா்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு மாநில நீதித் துறை பணியில் உள்ள நீதித் துறை அலுவலா்கள், சென்னை உயா்நீதிமன்ற அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், தமிழகத்திலுள்ள மாவட்ட நீதித்துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோா் (ஐஎஃப்ஹெச்ஆா்எம்எஸ்) இணையதளம் வாயிலாக சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கை சமா்ப்பிப்பது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.