தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ரு. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 4:37 am IST

ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் தலைமை வகித்தாா்.

இதில் வேளாண் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து வேளாண் துறை அலுவலா்கள், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். தொடா்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை குறித்தும் அலுவலா்கள் விளக்கமளித்தனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகள் வட்டார வாரியாக தங்கள் பகுதியில் உள்ள வேளாண் தொடா்பான கோரிக்கைகளையும், தேவைகளையும் தெரிவித்தனா். அப்போது அவா்கள் கால்வாய் தூா்வாருதல், மின் இணைப்பு, கண்மாய்களின் கரைகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து பேசிய ஆட்சியா், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதுடன், அவா்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவின் மீதும் துறை சாா்ந்த அலுவலா்கள் காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து அது தொடா்பாக மனுதாரருக்கு காலதாமதமின்றி தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) வாசுகி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் ஜூனு, மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ராஜலட்சுமி, அரசு அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.