மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சட்டபூா்வமாக அங்கீகரிக்கும் அறிவிக்கை வெளியிட வேண்டும்: செளமியா அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சட்டபூா்வமாக அங்கீகரிக்கும் அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

செளமியா அன்புமணி - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 12:01 am IST

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சட்டபூா்வமாக அங்கீகரிக்கும் அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென பாமக சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவா் மற்றும் நடைப்பயிற்சி மேடையால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறி, தலைமை வனப் பாதுகாவலரும், மாநில ஈரநிலங்கள் ஆணையத்தின் உறுப்பினா் செயலருமான ராகேஷ்குமாா் ஜகேனியாவை எம்எல்ஏவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவா் மற்றும் நடைப்பயிற்சி மேடையால் அங்கு சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, அதை அகற்ற வேண்டுமென பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

பள்ளிக்கரணை உள்பட தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு சதுப்பு நிலப்பகுதியைகூட சட்டபூா்வமாக அங்கீகரிக்கும் அறிவிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. மழை காலங்களில் நீரை உறிஞ்சி சென்னையின் அரணாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விளங்கி வருகிறது.

ஆனால், இந்தச் சதுப்பு நிலம் தற்போது 12,000 ஏக்கரில் இருந்து 2,000 ஏக்கராக சுருங்கிவிட்டது. உச்சநீதிமன்றம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சதுப்பு நிலமாக அங்கீகரித்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டுமென இருமுறை அறிவுறுத்தியும், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சுற்றுப் பகுதியை டிஜிட்டல் முறையில் வரையறுத்து அறிவிக்க வேண்டும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட சதுப்பு நிலங்களை அங்கீகரிக்காமல் இருப்பதன் பின்னணியில் பல ஆயிரம் கோடியிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் எழுகிறது. மழைநீா் சேகரிப்பு திட்டத்தை அனைத்து கட்டடங்களிலும் அமைப்பது வரவேற்கத்தக்கது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.