தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீவிர புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கிறது அர்னாப்!

தீவிர புயலாகக் கரையைக் கடக்கவுள்ள அர்னாப் புயல் பற்றி...

அர்னாப் புயல்

Published On :26 அக்டோபர் 2026, 3:26 pm IST

மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அக். 27ல் அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (25-10-26) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (26.10.2026) 05.30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (அர்னாப்) வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவுக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், நாளை (27-10-26) மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும்.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.

நேற்று (25-10-26) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (26-10-26) காலை 05.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவு பகுதியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் வரை தெற்கு கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (அக். 26) நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.