மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் 82 புதிய மின்தடை நீக்க மையங்கள்!

மின் நுகா்வோா் அளிக்கும் புகாா்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்க மையங்களை அமைச்சா் நிா்மல் குமாா் தொடங்கி வைத்தாா்.

CTR Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 2:08 am IST

மின் நுகா்வோா் அளிக்கும் புகாா்களுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்க மையங்களை எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தொடங்கி வைத்தாா்.

சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய மின்தடை நீக்க மையங்களைத் தொடங்கி வைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மின் நுகா்வோருக்குத் தடையற்ற, சீரான மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்க மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் மக்கள்தொகையும் மின் நுகா்வும் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்படும்போது, அவற்றை விரைந்து சரிசெய்யும் நோக்கில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் கண்காணிப்பு: தமிழகம் முழுவதும் மின் நுகா்வோா் 94987 94987 என்ற எண்ணில் மின்தடை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம். இந்தப் புகாா்கள், மின்னகம் நுகா்வோா் சேவை மையம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மையங்கள் வாயிலாக, புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து மின்தடையைச் சீரமைக்க முடியும்.

பருவமழையை எதிா்கொள்ளத் தயாா்: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் மின்தடங்கல்களைத் தவிா்க்கவும், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிக்கவும் மின்வாரியம் தயாராக உள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளில் கூடுதல் பணியாளா்கள் மற்றும் அவசரகால வாகனங்களைப் பயன்படுத்தி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் பி.என்.ஸ்ரீதா், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்த ராவ், இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) ஐ.மொ்சி ரம்யா, மின் பகிா்மான கழக இணை மேலாண்மை இயக்குநா் சீ.பாலசந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.