அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 30 மாவட்டங்களில் மழை தொடரும்! (அக். 25)

காலை 10 மணி வரை 31 மாவட்டகளில் மழை பெய்ய வாய்ப்பு.

rain

மழை - படம்: தினமணி

Published On :25 அக்டோபர் 2026, 10:59 am IST

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 31 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இந்தப் புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

தொடர்ந்து, இந்தப் புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை (அக். 26) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ‘அர்னாப்’ புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியில் வரும் அக். 28-ஆம் தேதி கரையைக் கடக்கக் கூடும்.

இந்தப் புயல் காரணமாக, குமரிக்கடல் காற்று தமிழகம் வழியாக வங்கக் கடல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. அப்போது, அந்தக் காற்று செல்லும் வழியெங்கும் பலத்த மழை பெய்யும் என எதிர்ப்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கடலூர், நாகப்பட்டினம், கரூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Department has said that rain will continue in 31 districts, including Chennai, for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.