பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை! (நவ. 1)

மாலை 4 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறித்து...

rain

மழை - படம்: தினமணி

Published On :1 நவம்பர் 2026, 2:15 pm IST

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடலில் சனிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இந்தப் புயல் சின்னம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, இந்தப் புயல் சின்னம் இன்று (நவ. 1) முரசு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு, முரசு புயலாக வலுவடைந்தது.

Story image

இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கே - தென்கிழக்கே சுமார் 630 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Centre has stated that rain is likely in 6 districts, including Chennai, over the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.