கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வானிலை அறிவிப்பு: சென்னை, 22 மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழை!

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை மழை பற்றிய வானிலை முன்னறிவிப்பு....

Rain expected in Chennai and 22 districts until 4 PM!

மழை - Dinamani

Published On :25 அக்டோபர் 2026, 2:17 pm IST

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 23 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் 'புயலாக' உருவெடுக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று, அக்டோபர் 28-ஆம் தேதி ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் (பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே) தீவிரப் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இப்புயலால் தமிழ்நாட்டிற்கு நேரடிப் பெரும் பாதிப்பு இல்லை என்றாலும், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Regional Meteorological Centre has stated that moderate rain is likely to occur in 23 districts of Tamil Nadu, including Chennai, until 4 PM today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.