தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் இன்றைய (அக். 24) வானிலை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்...

chennai rain

சென்னையில் மழை - ENS

Published On :24 அக்டோபர் 2026, 6:08 pm IST

தமிழகத்தில் இன்று (அக். 24) மழை நிலவரம் எப்படி இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது:

1. வடக்கு / வட உள் தமிழ்நாடு

வடக்கு உள் மாவட்டங்கள் முழுவதும் பரவலான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர்.

ஏற்காடு, கொல்லி மலைகள், கல்ராயன் மலைகள், ஜவ்வாது மலைகளில் தீவிர மழை பெய்யக்கூடும்.

2. காவிரி டெல்டா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள்

தெற்கு திசைக் காற்றினால் காவிரி டெல்டாவின் சில பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை.

3. மேற்கு தமிழகம் மற்றும் மலை மாவட்டங்கள்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல்.

நீலகிரி மற்றும் அதனை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய இடங்களிலும் மழை பெய்யக் கூடும், மழையின் தீவிரம் இடத்திற்கு இடம் மாறுபடும்.

குன்னூர்: நீலகிரியில் உள்ள மலைச் சரிவுகள், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கடுமையான மழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும்.

4. தெற்கு தமிழகம் – கன்னியாகுமரி, நெல்லை மலைப் பகுதிகள்

கன்னியாகுமரி மற்றும் அதன் அருகிலுள்ள தெற்குப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரியில் உள்ள சில இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்.

5. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள்

இன்று (அக், 24) இரவு முதல் நாளை காலை வரை மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மழைக்கு உகந்த நாளாகத் தெரிகிறது. நாளை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக வட உள் தமிழகம் மற்றும் குன்னூர் நீலகிரிப் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். காவிரி டெல்டாவின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TN Rain update for all districts by Tamilnadu weatherman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.